முகக் கவசம் அணியத் தேவையில்லை - சீனா அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

முகக் கவசம் அணியத் தேவையில்லை - சீனா அறிவிப்பு

எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை ...
பீஜிங்கில் பொதுவெளியில் வரும்போது, இனி பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று சீன அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 935 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. 924 பேர் குணம் அடைந்தனர். 9 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் அங்கு பொதுவெளியில் வரும்போது, இனி பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று சீன அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பீஜிங்கில் மே 17 இல் முகக் கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு வெளியானதும், பின்னர் ஜின்பாடி சந்தை மூலமாக புதிய தொற்று பரவியதும் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment