உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிப்பு - வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிப்பு - வர்த்தமானி வெளியீடு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50 இலிருந்து ரூபா 55 ஆக அதிகரிக்கப்படுவதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வரி அதிகரிப்பு, எதிர்வரும் 4 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுக்கொடுக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No photo description available.
Image may contain: text that says "2A කොටස (I) ජෙදය ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ විශෙෂ ගැසට් පත්‍රය பகுதிI: தொகுதி (I)- இலங்கைச் சனநாயக சாசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதி அட்டவணை 2020.08.14 2020.08.14 நிரல்! வியாபாரப்பண்ட வியாபாரட் இனம் இ.மு. தலைப்பு இ.மு. குறியடு நிரல்! 07.01 விவரணம் 0701.90 09-07 விசேட வியாபாரப் பண்ட அறவீடு பிற-உருளைக்கிழங்குகள் கிழங்குகள் கிலோ ராமிற்கு 55.00ரூபா"

No comments:

Post a Comment