நாட்டுக்கு தேவையான தேர்தல் முறையே மக்களின் எதிர்பார்ப்பு - டலஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 12, 2020

நாட்டுக்கு தேவையான தேர்தல் முறையே மக்களின் எதிர்பார்ப்பு - டலஸ் அழகப்பெரும

சு.க. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ...
தேர்தல் வரலாற்றிலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிட 30 இலட்சம் வாக்குகளை மேலதிகமாக வழங்கி கோட்டாபய ராஜபக்ஷ மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதோடு நாட்டுக்கு பொருத்தமான தேர்தல் முறைமையொன்றையும் வழங்க வேண்டுமென்றே மக்கள் இந்த ஆணையை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட அமோக வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், இத்தேர்தல் முறை உட்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. 32 வருடங்களாக இருந்துவந்த மோசமான குரோதமிக்க நிதி வீண் விரயமாகக்கூடிய இத்தேர்தல் முறைமை எதிர்காலத்தில் மாற்றியமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாம் முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளோம். 

ஜனாதிபதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கேட்டுக் கொண்டதும் இம்முறைமையை மாற்றியமைக்கவே. இப்படியான வெற்றியை எந்த ஒரு தலைவரும் பெற்றதில்லை. இது அபூர்வமான நிகழ்வாகும். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே 13 லட்சம் வாக்கு வித்தியாசம் காணப்பட்டது. என்றாலும் 8 மாதகாலத்துக்குள் 38 லட்சம் வாக்கு வித்தியாசம் காணப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வீ.பி உட்பட ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களும் இம்முறை ஜனாதிபதி ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வெலிகம நிருபர்

No comments:

Post a Comment