இரண்டு ஆண்டுக்குள் கொரோனா முடிவுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 21, 2020

இரண்டு ஆண்டுக்குள் கொரோனா முடிவுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு

இப்போது முடியாது.. இன்னும் நீண்ட ...
2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், 2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது உலகமயமாதால், நெருக்கம், தொடர்பில் இருத்தல் போன்றவை நமக்கு குறைபாடுகளாக உள்ளது. ஆனால் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. 

ஆகையால், இந்த கொரோனா தொற்றை நாம் 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். தற்போது இருக்கும் யூக்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். 

கூடுதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் புளூ முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம்’ என்றார்.

1918 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளூ என்ற வைரஸ் உலகையே உலுக்கி எடுத்தது. இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் 5 கோடி முதல் கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் தான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மெல்ல உலகம் பழைய நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment