சர்வாதிகாரப் போக்கிலான வரலாற்றை நோக்கி நாடு திரும்புகிறதா ? - சம்பிக்க கேள்வி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

சர்வாதிகாரப் போக்கிலான வரலாற்றை நோக்கி நாடு திரும்புகிறதா ? - சம்பிக்க கேள்வி

எல்னினோ சூழல் உருவாகும்; அதற்கான ...
(நா.தனுஜா)

கடந்த 2013 ஆம் ஆண்டில் சர்வாதிகாரப் போக்கிலான 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட முன்னதாக 17 ஆவது திருத்தம் நீக்கப்பட்டது. தற்போது அதே அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, புதிய அரசியலமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்துப் பேசப்படுவதானது நாடு சர்வாதிகாரப் போக்கிலான வரலாற்றுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியா? என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாட்டைப் பொறுத்த வரையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஒரு சாபக்கேடாக இருக்கின்றது என்றும் நாட்டின் மிக முக்கிய அடிப்படைகளாக இருக்கின்ற பொருளாதாரம், பாதுகாப்பு, ஜனநாயகம் ஆகிய மூன்றையும் இது வலுவிழக்கச் செய்திருக்கிறது என்றும் கூறியிருக்கும் ஆளுந்தரப்பு இவ்வருட இறுதிக்குள் அந்தத் திருத்தத்தை நீக்கி புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார குறைப்பு, சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், அரசியலமைப்புப் பேரவையின் அறிமுகம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளடங்கலாக பல்வேறு ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த 19 ஆவது திருத்தம் நீக்கப்படப்படுவதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியிருப்பதாவது, தற்போது ஆட்சிபீடமேறியிருக்கும் அரசாங்கம், இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டில் அதன் ஆட்சிக் காலத்தின்போது அரசியலமைப்பில் முற்போக்கான திருத்தங்களை ஏற்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். 

எனினும் சர்வாதிகார முறையொன்றை நோக்கிச் செல்வதற்கு ஏதுவான அரசியலமைப்பின் 18 'ஏ' திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதான அரசியலமைப்பின் 17 'ஏ' திருத்தத்தை நீக்கினார்கள்.

இந்நிலையில் தற்போதும் அதே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின் 19 'ஏ' திருத்தத்தை நீக்கி, அதன் பின்னர் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவது பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறெனின் வரலாறு மீண்டும் திரும்புகின்றதா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

No comments:

Post a Comment