ஏவுகணையுடன் சிறிய வடிவிலான அணு ஆயுத கருவியை தயாரிக்கும் வட கொரியா : ஐ.நா. தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

ஏவுகணையுடன் சிறிய வடிவிலான அணு ஆயுத கருவியை தயாரிக்கும் வட கொரியா : ஐ.நா. தெரிவிப்பு

வட கொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்தும் வகையில் சிறிய கருவிகளை (devices) தயாரித்து வைத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இனி எந்த நாட்டுடனும் போர் கிடையாது என்று அறிவித்தார். வட கொரியாவின் பாதுகாப்பை அணு ஆயுதங்கள் உறுதி செய்வதால் இனி போருக்கான தேவை இருக்காது என்று அவர் கூறியிருந்த நிலையில், வட கொரியா அதன் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருவதாக ஐ.நா. நிறுவனத்தின் ரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா. நிறுவனம் வட கொரியா மீது விதித்துள்ள தடைகளை கண்காணிக்கும் நிபுணர் குழு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் வட கொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்த திட்டமிடுகிறது. அதற்கான சிறிய வடிவிலான சாதனங்களை தயாரித்து வைத்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment