தேசிய பாதுகாப்பு சட்டமா? கொரோனா வைரசா? - ஹொங்கொங்கில் பொதுத் தேர்தல் ஒரு வருடத்திற்கு தள்ளிவைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

தேசிய பாதுகாப்பு சட்டமா? கொரோனா வைரசா? - ஹொங்கொங்கில் பொதுத் தேர்தல் ஒரு வருடத்திற்கு தள்ளிவைப்பு

ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் ஓராண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹொங்கொங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். 

ஆகையால் ஹொங்கொங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற சீன - ஹொங்கொங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு செல்கிறது.

இதற்கிடையில், ஹொங்கொங்கில் அடுத்த மாதம் (செப்டம்பர் 11) பொதுத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஹொங்கொங் சட்ட சபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது.

அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹொங்கொங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர். 

இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பங்கேற்க ஜனநாயகத்திற்கு ஆதரவான வேட்பாளர்கள் 12 பேருக்கு ஹொங்கொங் அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது.

இந்நிலையில், ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நிர்வாக அரசு தெரிவித்துள்ளது. 

ஹொங்கொங்கில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் வேகமெடுத்தது. அங்கு தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் வேகமாக பரவுவதால் அடுத்த மாதம் நடைபெறவிருந்த தேர்தல் ஓராண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஹொங்கொங்  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையுடன் மக்கள் இருப்பதால் தேர்தல் ஹொங்கொங் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment