"உள்ளதை உள்ளவாறே கூறும் கலாசாரமே ஊடகத் துறையின் சுபீட்சம்" - அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

"உள்ளதை உள்ளவாறே கூறும் கலாசாரமே ஊடகத் துறையின் சுபீட்சம்" - அமைச்சர் வியாழேந்திரன்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் அலைவரிசையான நேத்திரா தொலைக்காட்சியில் கடந்த ஞாயிறு (23-.08.-2020 ) இரவு 7.30 இற்கு ஒளிபரப்பான 'மக்கள் மேடை' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய வெகுஜன மற்றும் தபால் சேவைகள் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் ஊடக துறை சீர்திருத்த திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். 

"உள்ளதை உள்ளவாறே கூறும் கலாசாரமே ஊடகத் துறையின் சுபீட்சம்" என்று அவர் குறிப்பிட்டார். பிராந்திய செய்தி நிருபர்களின் தேவை குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். 

புதிய ஊடக மூலங்களான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தள ஊடக கலாசாரங்களில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாக வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார். 

அரச ஊடகங்களில் உள்ள தமிழ் மொழிசார் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க ஊடகக் கல்வி தரமும் உயர்த்தப்பட்டு பட்டப் படிப்பு வரை பரிமாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர், அரச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற முதலாவது நேர்காணல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சரை நேர்கண்டு உரையாடியவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment