கொலையான மாணவனின் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Monday, August 24, 2020

கொலையான மாணவனின் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் போராட்டம்

வாள் வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ வாள் வெட்டுக் குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வாள் வெட்டு குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்து கதறி அழுதனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad