மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் - வாக்களித்த பின் பிரதமர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் - வாக்களித்த பின் பிரதமர் தெரிவிப்பு

கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு ...
(இராஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் முழுமையாக வெளியான பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராக உள்ளோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய கட்டாயம் இம்முறை காணப்படுகிறது. பொருளாதார சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மெதமுல்ல டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வாக்குரிமையின் பெறுமதியை புரிந்து கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி பலமான அரசாங்கத்தை இம்முறை ஸ்தாபிப்பது கட்டாயமாகவுள்ளது.

பொதுத் தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக வெளியான பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தயாராக உள்ளோம். 

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு 69 இலட்ச மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முழுமையாக செயற்படுத்துவோம்.

பொருளாதார ரீதியில் எழுந்துள்ள சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும். இதனை காட்டிலும் பாரிய சவால்களை மிக சுலபமாக வெற்றி கொண்டுள்ளோம். தேர்தல்கள் ஆணைக்குழு, சுகாதார பிரிவினர் வகுத்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றமை மகிழ்ச்சிக்குரியது என்றார்.

No comments:

Post a Comment