ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் கைதான சீனப் பிரஜைக்கு பிணை! - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் கைதான சீனப் பிரஜைக்கு பிணை!

TamilMirror.lk
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் 30 வயதான சீனப் பிரஜை நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவரை கொழும்பு, கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ட்ரோன்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ட்ரோன்கள் இயக்கம் குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைத்து ட்ரோன்களையும் இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment