சிறந்த பண்புடைய மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் - லொஹான் ரத்வத்த - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

சிறந்த பண்புடைய மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் - லொஹான் ரத்வத்த

நாடாளுமன்றத்திற்குள் சண்டியனான ...
நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன. பாரியளவில் மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு சிறந்த பண்புடைய மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னரான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடுகையில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மக்களுக்காக சேவையாற்றக்கூடிய முற்போக்கான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதன் மூலம் ஜனாதிபதியினால் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு மக்கள் உதவ வேண்டும். 

எதிர்கால சந்ததியினருக்காகவும் தற்போதைய சந்ததியினரின் மேம்பாட்டிற்காகவும் ஜனாதிபதியுடைய 'சுபீட்சத்தின் நோக்கு' வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி மாவட்ட மக்களின் பொருளாதாரம், சமூக மேம்பாடு, கல்வி, அபிவிருத்தி, விளையாட்டு, சுகாதார சேவை, விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும்.

பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தீர்வுகள் வழங்கப்படும். நாட்டின் நன்மை குறித்து பொறுப்புடைய சிறந்த வேலைத்திட்டங்களைக் கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் முன்னெடுக்கப்படும்.

சுதந்திரத்தின் பின்னர் வௌ்வேறு அரசாங்கங்கள் ஆட்சியமைத்திருந்தாலும் அந்த ஆட்சிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேலைத்திட்டங்களில் வௌ்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. 

கண்டி மாவட்டமானது எமது நாட்டின் இரண்டாவது பாரிய நகரமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய மலைநாட்டில் வாழும் மக்களுக்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அன்று மஹிந்த சிந்தனை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தற்போது சுபீட்சத்தின் நோக்கு என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad