ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் முகக் கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் முகக் கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

குழந்தைகளும் மாஸ்க் அணிய வேண்டுமா ...
முகக் கவசம் அணிவது தொடர்பாக முதல் முறையாக உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

தொற்று பரவி ஏறத்தாழ 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது.

இதனால், தற்போதைக்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதனால், கொரோனா பரவியுள்ள அனைத்து நாடுகளும் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. 

இந்நிலையில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் பெரியவர்களை போலவே முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “ஐந்து வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக் கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக் கவசம் அணிய வேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment