இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் உதவ சீனா தயார் - News View

Breaking

Post Top Ad

Monday, August 24, 2020

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் உதவ சீனா தயார்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் ...
(நா.தனுஜா)

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்திருக்கிறது.

இலங்கைக்கான சீனத் தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஹு வே நேற்று திங்கட்கிழமை நிதி மற்றும் மூலதனச்சந்தை விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

இச்சந்திப்பு குறித்து சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்படப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்த அதேவேளை, இதன்போது பல்வேறு விடங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்திருக்கிறது. 

அத்தோடு இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீன இலங்கையில் குறிப்பாக நெடுஞ்சாலை நிர்மாணம், துறைமுகம், விமான நிலையம் போன்ற முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுகளைச் செய்திருக்கிறது. 

இவ்வாறு சீனாவினால் முதலீடு செய்யப்பட்டிருக்கும் சில திட்டங்களில் போதிய வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாமை குறித்து அண்மைக்காலங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அத்தோடு சீனாவின் முதலீடுகள் இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளுவதாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad