
நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக் கவசம் அணிவதாக மெக்சிகோ நாட்டு ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படுத்தி வருகிறது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சமூக விலகல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் முகக் கவசம் அணிவதை தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து வந்த விமர்சனம் காரணமாக டிரம்ப் முகக் கவசம் அணியத் தொடங்கினார்.
இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர், தனது நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக் கவசம் அணிவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment