தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இரு சக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, August 1, 2020

demo-image

தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இரு சக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம்

DSC_0963-720x380
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இரு சக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அகில இலங்கை புதிய இரு சக்கர வாகனங்களின் விற்பனை முகவர் சங்க கிழக்கு மாகான பிரதிநிதி ஐயாசாமி ராமலிங்கம் தெரிவித்தார்.

இது விடயமாக வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்போது அவர் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டை அரசாங்கம் விதித்துள்ளது.

இதில் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பலை நிலையானதாகப் பேனுவதற்காக அரசாங்கம் இரு சக்கர வாகனங்களின் இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களை நம்பி தொழில் செய்யும் வாகன முகவர்கள், எம்மிடம் தொழில் புரியும் தொழிலாளர்கள், திருத்த வேலை செய்யும் தொழிலாளர்கள், உள்ளிட்ட அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட 4 சதவீத கடன் தொகையினைப் பெற்றே இத்தொழிலினை நாங்கள் செய்து வருகின்றேம். இத்தடை காரணமாக இக்கடன் தவணைக் கட்டணங்களையும் செலுத்த முடியாமற் போயுள்ளது.

எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனஞ்செலுத்தி இரு சக்கர வாகன இறக்குமதியில் ஏற்படுத்தியுள்ள தடையினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகானத்தில் உள்ள புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனை முகவர்கள் பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *