கொரோனா தொற்று நோய் காரணமாக, வர முடியாமல், மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 291 பேர், இன்று (22) பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விமானத்தில், மாலைதீவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment