ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கினார் வட கொரியா ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கினார் வட கொரியா ஜனாதிபதி

கொரியப் போர் நினைவு தினத்தையொட்டி வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கினார்.

கொரியப் போரின் 67வது ஆண்டு நினைவு தினம் மிகவும் விமரிசையாக தலைநகரில் கொண்டாடப்பட்டது. நினைவு தினத்தையொட்டி வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ராணுவ தளபதிகளுடன் உரையாடினார். 

கொரியப் போர் நினைவு தினத்தையொட்டி வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

அதனை பெற்றுக் கொண்ட ராணுவ அதிகாரிகள் அனைவரும் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டதை கண்ட கிம் ஜாங் அன் அதனை மகிழ்ச்சியுடன் ரசித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் கலகலப்பாக உரையாடினார். 

கொரோனா அச்சுறுத்தல் உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில், வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

No comments:

Post a Comment