மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை, ஆனால் ராஜபக்ஷ குடும்பம் நல்லா களவுகள் செய்தனர் - முன்னாள் ஆளுனர் அஷாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 4, 2020

மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை, ஆனால் ராஜபக்ஷ குடும்பம் நல்லா களவுகள் செய்தனர் - முன்னாள் ஆளுனர் அஷாத் சாலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

இந்நாட்லுள்ள மக்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பம் ஆறு மாதம் நல்லா களவுகள் செய்தனர் என முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஷாத் சாலி குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடியில் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது. மாதாமாதம் உங்கள் வீட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் வரும் என்றார்கள். மக்கள் எதிர்பார்த்தனர். மக்களுக்கு நவம்பர் முதல் ஜூன் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பம் ஆறு மாதம் நல்லா களவுகள் செய்தனர்.

அவர்கள் வந்த நல்ல நேரம் நாட்டில் கொரோணா வந்தது. நாட்டில் பணம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் உலகத்திலே பெற்றோல் விலை குறைந்த நிலையில் ஒரு வவுசர் இருபது ரூபாய்க்கு தரும் நிலையில் உள்ளது. எங்களது அரசாங்கம் இருந்த காலத்தில் கூடும் போது கூடும் குறையும் போது குறையும். ஆனால் ராஜபக்ஷ காலத்தில் ஏறுமே தவிர இறங்க மாட்டாது.
பெற்றோல் பணத்தின் மூலம் வீட்டுக்கு ஐயாயிரம் கொடுப்பதாக சொன்னதுதான் உண்மை. அனைவரும் கிடைத்ததாக என்று தெரியாது. மகிந்தானந்தா அளுத்கமகே கூறியிருந்தார். மார்ச், ஏப்ரல், மே, ஜுன் மாதத்திற்கான மின்சார பட்டியல், தண்ணீர் பட்டியல், தொலைபேசி பட்டியல் என்பன வராது என்றார். ஆனால் பட்டியல் வந்துள்ளது. இதனை ராஜபக்ஷவின் வீட்டுக்கு அனுப்பி விட்டால் சரி.

பட்டியல் வராது என்றார்கள். ஆனால் இதனை இரண்டு மடங்காக செய்து கள்ள பட்டியலாக அனுப்பியுள்ளனர். இந்த விடயத்தினை மக்களிடம் இருந்து மறைப்பதற்கு கருணா அம்மானை கொண்டு வந்தார்கள். கொழும்பில் சரத் வீரசேகரய கொண்டு போட்டுள்ளார்கள். தமிழ் விடுதலைப் புலிகளை கொலை செய்ததாக அவன் சொல்கின்றார். இங்கு கருணா போட்டுள்ளார். அவன் சொல்லுறான் நான் மூவாயிரம் இராணுவத்தினை கொலை செய்தேன் என்று. எப்படி மகிந்த சமப்படுதுகின்றார் என்று பாருங்கள்.

சிங்கள பக்கம் சென்றால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை. தமிழ், முஸ்லிம் தலைமைகள் யாரும் வந்து பேரம் பேச வேண்டாம். நீங்கள் இல்லாத அரசாங்கத்தினை அமைத்துள்ளோம் என்கின்றார். ஆனால் எமது பகுதியில் பல்வேறு கட்சிகளினை இறங்கியுள்ளார். கல்முனையில் குதிரையில், மாட்டில் வாரானுகள். வேட்பாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்றார்.

No comments:

Post a Comment