
அமெரிக்காவில் சொப்பிங் செய்தபோது, மாஸ்க் அணியச் சொன்னவரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். பிறர் அறிவுரை கூறினால் ஆத்திரப்படுவதையும் காண முடிகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பால்ம் பீச் பகுதியில் சொப்பிங் செய்த வாலிபர் வின்சென்ட ஸ்கேவட்டா (வயது 28), மாஸ்க் அணியாமல் கடைக்குள் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை மாஸ்க் அணியும்படி மற்றொரு வாடிக்கையாளர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வின்சென்ட், தனது துப்பாக்கியை எடுத்து, அந்த வாடிக்கையாளரை நோக்கி நீட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வின்சென்டை கைது செய்தனர். பின்னர் அவர் பினையில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், பிரான்சில் இந்த மாத துவக்கத்தில், மாஸ்க் அணியும்படி கூறியதால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் சாரதியை தாக்கியதில் அந்த சாரதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment