வறிய மக்களுக்கு உதவி தருகின்றோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கத் தேவையில்லை, அவர்களுக்கு வாழ வழியேற்படுத்திக் கொடுப்பதே நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி என்கிறார் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

வறிய மக்களுக்கு உதவி தருகின்றோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கத் தேவையில்லை, அவர்களுக்கு வாழ வழியேற்படுத்திக் கொடுப்பதே நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி என்கிறார் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்

அபிவிருத்திகள் எதையுமே செய்யாமல் ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வறிய மக்களுக்கு உதவி தருகின்றோம் வீடமைத்துத் தருகின்றோம் என்றெல்லாம் பொய் வாக்குறுதி கூறி அற்ப அரசியலுக்காக மக்களை ஏமாற்ற வேண்யதில்லை. வறுமைப்பட்ட மக்களுக்கு வாழ வழியேற்படுத்திக் கொடுப்பதே நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி என கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை 31.07.2020 இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் வகையில் ஆதரவாளர்கள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சில அரசியல்வாதிகளுக்கு மக்களைத் தொடர்ந்து வறுமையிலேயே உழல வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்ற உள்நோக்கமும் இருக்கிறது. இதனால்தான் அடிமட்ட மக்களை அப்படியே வைத்திருக்க அவர்கள் நினைக்கிறார்கள்.

வறிய மக்களை சதா காலமும் கையேந்தும் நிலையில் விட்டு வைப்பது ஒரு சமூகத் தலைவனின் தலைமைத்துவப் பொறுப்பாக இருக்க முடியாது.

நான் தேர்தல் பிரசாரத்திற்காக வீடுவீடாகச் செல்லும்போது மக்கள் வாழ்வதற்கான தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள். உதவியைக் கோரி நிற்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஏழைகளிடம் மற்ற அரசியல்வாதிகள் கடந்த 30 வருடங்களாக பொய் வாக்குறுதிகளை வழங்கித்தான் வந்திருக்கின்றார்கள்.

வீடமைத்துத் தருகின்றோம் என்று வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் வெளிநாடுகளிலும் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார்கள். ஆனால் ஏழைகள் இவர்களது பொய் வாக்குறுதிகளை நம்பி இன்னமும் ஒழுகிக் கரையும் குடிசைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நானும் வாக்குறியளிக்கின்றேன். ஆனால் இப்படிப்பட்ட பொய் வாக்குறுதிகள் அல்ல. நான் கடந்த காலத்தில் அளித்து நிறைவேற்றிய வாக்குறுதிகளைப் போன்றே இப்பொழுதம் சாத்தியப்படக் கூடிய வாக்குறுதிகளை வழங்குகின்றேன். நீங்கள் என்னை நம்பலாம் என்பதற்கு நான் முதலமைச்சராகவும் மாகாண அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் என்னால் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளே சாட்சிகளாகும்.

2021 ஆம் ஆண்டாகும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள் வெறுமனே காலத்தைக் கழிக்காமல் அவர்கள் கை நிறைய வருமானம் பெறும் தொழில்வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள் என்பதே எனது வாக்குறியாகும்.

ஏற்கெனவே நான் அளித்த வாக்குறுதிகளின்படி என்னால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தரத்தினாலான ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 2000 இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளதோடு அவர்கள் மாதாந்தம் பெறும் சம்பளம் ஒட்டு மொத்த வருமானமாக சுமார் 5 கோடி ரூபாய் இந்த மாவட்டத்திலே சுழல்கிறது என்பது சகலரும் அறிந்ததே. இத்தகைய வாழ்வாதாரத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் ஏற்படுத்தித் தரவில்லை.” என்றார்.

No comments:

Post a Comment