கடந்த காலத்தில் ஜனாதிபதி குறித்து பொய்ப் பிரசாரம், அரசுடன் இணைந்து செயற்பட தயாராகிவிட்ட வன்னி மக்கள் என்கிறார் கேர்ணல் ரட்ணபிரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, July 25, 2020

கடந்த காலத்தில் ஜனாதிபதி குறித்து பொய்ப் பிரசாரம், அரசுடன் இணைந்து செயற்பட தயாராகிவிட்ட வன்னி மக்கள் என்கிறார் கேர்ணல் ரட்ணபிரிய

ஜனாதிபதி தொடர்பாக வன்னி மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் செய்யப்பட்டதாலே கடந்த தேர்தலில் பெரும்பான்மையான வடக்கு மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் இம்முறை அரசுடன் இணைந்து செயற்பட வன்னி மக்கள் தயாராகி விட்டார்கள். இந்தத் தேர்தலில் சாதகமான மாற்றத்தை வடக்கில் ஏற்படுத்த இருப்பதாக வன்னி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் கேர்ணல் ரத்னப்பிரிய பந்து தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு நிம்மதியாக வாழ முடியாது என்று தவறான பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதுதான் வன்னி மக்களுக்கான நலன்புரி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக வடக்கு மக்கள் எதிர்க்கட்சிக்கு தெரிவாகும் தரப்பிற்கே வாக்களித்தார்கள்.

எதிரணிக்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளை விட ஆளும் தரப்பிற்கு தெரிவாகும் பிரதிநிதிகளால்தான் அதிக சேவையாற்ற முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கு அபிவிருத்தி காணவில்லை. தெற்கை போன்று வடக்கையும் முன்னேற்றுவது தான் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment