சிறைக் கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் - மட்டு. மறை மாவட்ட பேராயர் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, July 25, 2020

சிறைக் கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் - மட்டு. மறை மாவட்ட பேராயர் கோரிக்கை

மட்டு வைத்தியத்துறையை பாராட்டிய ...
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக நாடொன்றில் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பது நியாயமில்லை. சிறையில் சாதாரணமாக தடுத்து வைக்ப்பட்டவர்கள் குற்றவாளிகளல்ல. அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறையில் இருப்பவர்கள் எல்லோரையும் நாம் தண்டனை பெற்றவர்களாகவோ, குற்றவாளிகளாகவோ கருத முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க முடியும். 

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை அவர்கள் சாதாரண தடுப்புக் கைதிகள்தான். அவர்களை குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்த முடியாது. ஆதலால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படலாகாது

சிறையிலிருக்கும் விசாரணைக் கைதியொருவர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அபேட்சகராக நிற்கிறார். அதே நேரத்தில், அதே சிறையில் அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை தேர்தல் ஆணையாளர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புளியந்தீவு நிருபர்

No comments:

Post a Comment