
சீனாவில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஓடர் செய்து சாப்பிட்ட குடும்பத்தினர், செத்துப்போன வவ்வால் கிடந்ததால் கொரோனா டெஸ்ட் மேற்கொண்டனர்.
சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் சென் என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் கடந்த 10ம் திகதி அருகில் உள்ள டெஸ்டாரன்டில் பன்றி இறைச்சு சூப் ஓடர் செய்துள்ளனர்.
சூப் வந்ததும் சென்னின் அம்மா சூப் டப்பாவை திறந்து பார்த்துள்ளார். அப்போது கருப்பாக ஒரு பொருள் கிடந்துள்ளது. நறுமனத்திற்காக சேர்க்கப்பட்ட வாசனைப் பொருட்களாக இருக்கலாம் என நினைத்து சூப்பை குடிக்க ஆரம்பித்தனர்.
பாதி சூப்பை குடித்த பின்னர் சென்னின் அம்மாவிற்கு சந்தேசம் வலுத்தது. இதனால் ஒரு குச்சியை எடுத்து அது என்ன வென்று பார்க்கும்போது செத்துப்போன வவ்வால் என்று தெரியவந்தது. அதற்கு இறகு, காது இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டாப்பாவை அப்படியே மூடி வைத்துவிட்டு, உள்ளூர் டி.வி. சேனலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வவ்வால் கிடத்த படத்தை வெளியிட, வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
சீனாவின் உயிரினங்கள் விற்கும் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியது. அதுவும் வவ்வால் முக்கியமான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் அந்த குடும்பத்தினர் உடனடியாக சென்று கொரானா பரிசோதனை செய்துள்ளனர்.
சூப்பிற்கான தங்களது பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று ரெஸ்டாரன்டில் சென் குடும்பத்தினர் கேட்ட போது, உள்ளூர் உணவு தயாரிக்கும் நிறுவனத்திடம் நாங்கள் சூப் கொள்முதல் செய்வோம் என்று தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தை டி.வி. சேனல் தொடர்புகொண்டபோது, நாங்கள் சமைத்து பக்கெட் செய்யும்போது இவ்வாறு தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் இந்த சம்பவம் அந்த குடும்பத்தினருக்கும், சூப் வாங்குபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment