அமெரிக்க போர் விமானத்தின் செயல் சட்டவிரோதமானது, பயங்கரவாத நடவடிக்கை என ஈரான் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 25, 2020

அமெரிக்க போர் விமானத்தின் செயல் சட்டவிரோதமானது, பயங்கரவாத நடவடிக்கை என ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது என்று ஈரான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் தெஹ்ரானில் இருந்து நேற்றுமுன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு மஹன் விமானம் சென்று கொண்டிருந்தது. சிரியா எல்லையில் திடீரென அமெரிக்க போர் விமானம் மிக அருகில் இடைமறிப்பது போன்று வந்தது. 

நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தின் உயரத்தை சட்டென்று குறைத்தார். இதனால் சில விமானிகள் காயம் அடைந்தனர். பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான். ஆனால் 1000 மீட்டர் இடைவெளி இருந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் 100 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா விமானம் அருகில் பறந்தது சட்ட விரோதம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஜாவத் ஜரிஃப் கூறுகையில் ‘‘இந்த நடவடிக்கை அக்கிரமத்தின் அக்கிரமம். அமெரிக்கா சட்டவிரோதமாக மற்ற நாடுகளின் பிராந்தியத்தை ஆக்கிரப்பு செய்கிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் படைகளை பாதுகாக்க அப்பாவி பொதுமக்கள் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டமிடப்பட்ட சிவில் விமானத்தை துன்புறுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில் ‘‘இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இது குறித்து நாங்கள் சர்வதேச பொது விமான போக்குவரத்து அமைப்பிடம் முறைப்பாடு அளிப்போம். இது அமெரிக்க அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

No comments:

Post a Comment