ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது

கொழும்பு, வணாத்தமுல்லை கிராம சேவை அலுவலர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கர வண்டி சாரதியொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார். 

தெமட்டகொட, கொழும்பு 09 ஐ சேர்ந்த ஒருவரிடமே சந்தேக நபரான பெண் உத்தியோகத்தர் இலஞ்சம் கோரியிருந்தார். 

கைது செய்யப்பட்டுள்ள கிராம சேவை உத்தியோகத்தரும் முச்சக்கர வண்டி சாரதியும் (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad