பாலித தேவப் பெரும மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

பாலித தேவப் பெரும மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி

பாலித தெவரப்பெரும மீது தாக்குதல் ...
முன்னாள் இரஜாங்க அமைச்சர், களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான பாலித்த தேவப் பெரும தாக்குதல் ஒன்றில் காயமடைந்து களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, பாலித்த தேவப் பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்துகம பொலிஸார் கூறினர்.

மத்துகம - வேகந்தல பகுதியில் குடி நீர் திட்டம் ஒன்றின் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய சென்ற போது, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலித்த தேவப் பெருமவின் இடது காலில் கடுமையான காயங்கள் உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment