பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் வீரர்களையும் அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் - கலாநிதி வி.ஜனகன் குற்றச்சாட்டு..! - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் வீரர்களையும் அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் - கலாநிதி வி.ஜனகன் குற்றச்சாட்டு..!

இலங்கையை சர்வதேச ரீதியாக தேயிலை ஊடாக அடையாளப்படுத்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் ஊடாக அடையாளப்படுத்தும் தேசிய கிரிக்கட் வீரர்களையும் இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி,ஜனகன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் கிரிக்கட் சபையில் இருந்தே விசாரணைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

அத்துடன், சிறிலங்கா கிரிக்கட் சபையில் பல ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதற்கு அங்கு பொறுப்பாக இருந்தவர்கள்தான் காரணம் என்று தெரிந்திருந்தும், அவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசாரணைகளை நாட்டின் பெருமையாக கருதுகின்ற கிரிக்கட் வீரர்களிடம் இருந்து ஆரம்பித்திருப்பதென்பது துரதிஸ்டவசமான ஒரு விடயம்.

இலங்கையின் பெயரை உலகளவில் கொண்டுசென்ற பெருமை எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், தேசிய கிரிக்கட் வீரர்களையுமே சாரும். இந்த அரசாங்கதத்தின் அங்கத்தவர்களான இரண்டு தரப்பினரையும், தங்களின் அரசியல் வலைக்குள் சிக்கவைத்து அவர்களின் மீது ஏறி அரசாங்கம் சவாரி செய்கிறது.

1000 ரூபாய் வேதனம் தருகின்றோம் என்று பெருந்தோட்ட மக்களை வைத்து ஒரு பக்கம் அரசியல் நடத்தப்படுகிறது, ஆனால் இதுவரை அந்த 1000 ரூபாய் கிடைப்பதற்கான சாத்தியம் ஏற்படவில்லை. இதுவரை அந்த விடயத்தில் அரசியல் செய்து வந்த அரசாங்கம் சற்று தடம்மாறி கிரிக்கட் விளையாட்டு துறையில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கட் விளையாட்டு வீரர்களை வைத்து இப்போது அரசியல் செய்கிறது.

நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி விரும்பக் கூடிய கிரிக்கட் வீரர்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். எனவே, தற்போது கொவிட் 19 க்கும் பின்னர் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கி இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக கலாநிதி வி.ஜனகன் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment