சாதி, மத, பேதம், இனத்துவேசம் காட்டாது நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் - களுவாஞ்சிக்குடியில் சஜித் பிறேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Saturday, July 4, 2020

சாதி, மத, பேதம், இனத்துவேசம் காட்டாது நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் - களுவாஞ்சிக்குடியில் சஜித் பிறேமதாஸ

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சாதி, மத, பேதம், இனத்துவேசம் காட்டாது நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எவ். மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை (04.07.2020) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆதரவாளர்கள் மத்தியில் கலந்து அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு நாமெவ்லோரும் இணைந்து கொண்டு வாழ்விலும், பாதுகாப்பிலும், பங்காளியாக இருந்து, எதிர்காலத்தின் பங்குதாரர்களாக கைகோர்ப்போம்.

நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாக இருந்தால் நேரடியாககக் கண்காணிக்கின்ற ஒரு முறைமை இருக்க வேண்டும்.
அனைத்து வேலைத் திட்டங்களையும், நேரடியாககக் கண்காணிக்கின்ற ஒரு முறைமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிலும் வெற்றிகாண முடியாது.

மட்டக்களப்பு மாவாட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், 345 கிராம சேவகர் பிரிவுகளையும் 1240 கிராமங்களையும், கொண்டுள்ளது. இவைகளுக்கு வகை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் வாழ்வாதாரங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து வேவைகளையும் பூரத்தி செய்ய வேண்டும், இவைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

இவைகளைப் பூர்தி செய்வதற்கு மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனூடாக ஒரு புதிய யுகத்தைப் படைக்கலாம்” என்றார்.

No comments:

Post a Comment