
பின்தெனிய பிரதேசத்தில் ATM அட்டையை பயன்படுத்தி பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றிலிருந்த 55,000 ரூபா பணத்தை திருடிய குறித்த சந்தேகநபர், அவ்வீட்டிலிருந்த ATM அட்டையை திருடி, அதன் மூலம் 140,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளார்.
பின்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துகொலதெனிய பிரதேசத்தில் நேற்று (30) இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பின்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
பேரகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்தேகநபரை இன்று (31) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.
இச்சந்தேகநபரிடம் பின்தெனிய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment