கிரிபத்கொடையில் 61 கிலோ 640 கிராம் கேரள கஞ்சா மற்றும் 692,000 ரூபா பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவல்துவ பிரதேசத்திற்கு திரும்பும் சந்திக்கு அருகில் வைத்து நேற்று (03) மாலை இக்கைது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த கேரள கஞ்சாவை லொறியில் கொண்டு சென்றபோது, கைப்பற்றியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த வியாபாரத்தின் மூலம் பெறப்பட்டதாக கருதப்படும் 692,000 ரூபா பணமும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை, இன்று (04) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சந்தேகநபரிடம், திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment