அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள அவசர கடிதம்

(எம்.மனோசித்ரா)

உள்ளக பயிற்சி வைத்தியர்கள் 500 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனத்தை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளமையால் நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் நேரடி சவால்களுக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க முடியாது. எனவே எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி தகுதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த நியமனங்களை வழங்குவதற்கு ஆணைக்குழு அனுமதியளிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கேவினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உள்ளக பயிற்சிக்கான வைத்தியர்கள் தாம் பணியாற்றுகின்ற வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்களும் சேவை புரிபவர்களாவர்.

அதற்கமைய நாட்டில் அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான சேவைக்காக உள்ளக பயிற்சி வைத்தியர்களின் சேவை அத்தியாவசியமானதாகும்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி தற்போது தேவையான அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்த உள்ளக பயிற்சி வைத்தியர்கள் 500 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளது.

ஆனால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு தற்போது தேர்தல் காலம் என்பதால் அந்த நியமனங்களை இடை நிறுத்துமாறு ஆணைக்குழு சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாத காரணத்தினால் வழங்கப்படவிருந்த இந்த உள்ளக பயிற்சி வைத்தியர் நியமனத்தை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் நேரடி சவாலுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது.

அத்தோடு மேற் கூறப்பட்டவாறு தேர்தல் நடைபெறவுள்ள காலமாக இருந்தாலும் எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி தகுதிகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே வைத்தியர் நியமனங்கள் வழங்கப்படும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

எனவே எம்மால் கூறப்பட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தகுதிகளை நிறைவு செய்துள்ள உள்ளக பயிற்சி வைத்தியர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு கோருகின்றோம்.

No comments:

Post a Comment