(இராஜதுரை ஹஷான்)
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தினையும் முன்னேற்றும் பாரிய சவால் உள்ளது. பொதுத் தேர்தல் ஊடாக பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே சவால்களை வெற்றிகொள்ள முடியுமென பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஜனாதிபதி திகதி குறிப்பிட்ட தினத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றது. பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது. பொதுத் தேர்தலை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றுவது அரசாங்கத்திற்கு உள்ள பிரதான சவால். மறுபுறம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொதுத் தேர்தல் ஊடாக பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் நோக்கம் நிறைவேறும் என்றார்.

No comments:
Post a Comment