(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் அனைத்து இன மக்களின் ஆதரவு அவசியம். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை கொண்டு பொதுத் தேர்தலின் வெற்றியை மதிப்பிட முடியாது.
தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித் தடையும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும்.
பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பிறகு சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment