(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தியினர் அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது. பலவீனமான அரசாங்கத்தை மக்கள் இனியொரு போதும் தோற்றுவிக்கமாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு மக்களாணை ஒருபோதும் கிடைக்காது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முயற்சிக்கின்றார்.
பெரும்பாலான மக்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு கிடைக்காது நல்லாட்சி அரசாங்கத்தை போன்று பலவீனமான அரசாங்கத்தை மக்கள் இம்முறை தோற்றுவிக்கமாட்டார்கள்.
பொதுத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும். மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிக்கும் என்றார்.
No comments:
Post a Comment