மக்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தால் எனது மக்களுக்கு நான் வழிகாட்டியாக இருப்பேன் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

மக்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தால் எனது மக்களுக்கு நான் வழிகாட்டியாக இருப்பேன் - ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஸ்தாபக தலைவர் அமரர். செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாக என்னை பார்க்காவிட்டாலும் கங்கானி கருப்பையாவுடைய கொள்ளு பேரனாக தன்னை பார்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான மக்கள் சந்திப்பு இன்று (27) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட அதன் உப தலைவர் அனுசியா சிவராஜா, நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான மறுதபாண்டி ராமேஸ்வரன், கணபதி கனகராஜ், இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் பி.இராஜதுறை, நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

ஆனால் தேயிலை கொழுந்தினை பறிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 2 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்தினை பறிக்க வேண்டும் எனவும், இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் மேலதிகமாக 1 லீற்றர் பாலினை நாள் ஒன்று பெற வேண்டும் என்ற நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எல்லா தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயினை பெற்று கொடுக்க வேண்டுமென எனது தந்தை உயிரிழக்கும் முன்பு கூட என்னிடம் கூறினார்.

மேலும், மலையகத்தில் இன்று எத்தனையோ இளைஞர்கள் கல்வியினை முடித்தும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வினை பெற்று கொடுக்க முன்வருவதில்லை. 

ஒரு பகுதியில் வீடமைப்பினை மாத்திரம் அமைத்து கொடுத்தால் போதாது. அங்கு பொருளாதாரத்தினை தேடிகொள்ளும் வகையில் அதற்கான நடவடிக்கையினையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு பசளையிடுவது போல் அங்கும் இங்கும் வீடுகளை தூவி விட்டிருக்கிறார்கள். 

இலங்கை தொழிலாளர் காங்ரஸிக்கு முதன் முறையாக ஒரு இளமையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது. மக்கள் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தால் எனது மக்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக எதிர்வரும் காலங்களில் நான் இருப்பேன். இன்று மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட்டு துறையில் சாதனை படைத்துள்ளார்கள். மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் அதனை பற்றி பேசுவதில்லை. 

செளமியமுர்த்தி தொண்டமானின் காலப் பகுதியில் அநேகமான தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டன. மலையகத்தில் உள்ள ஒரு முக்கயமான விடயம் தான் சுற்றுலா பயணிகளை வரவழைப்பது. மலையகத்தை ஒரு சுற்றுலா பிரதேசமாக மாற்றிகாட்டுகிறோம். அத்தோடு படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்க முடியும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment