உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்கவும், பூஸாவில் கைதிகள் உண்ணாவிரதம் - சிறை அதிகாரிகள் மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்கவும், பூஸாவில் கைதிகள் உண்ணாவிரதம் - சிறை அதிகாரிகள் மறுப்பு

உடற்பயிற்சிக்கு வெளியே செல்லும் நேரத்தை அதிகரிக்குமாறு கோரி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், உணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று முன்தினம் இரவு முதல், 15க்கு மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும், 2 மணித்தியாலங்கள் சிறையில் இருந்து வெளியே வந்து உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில், வெளியே செல்லும் நேரத்தை அதிகரிக்குமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாதபடி தங்களை அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

ஆனால், இவர்களின் கோரிக்கையை ஏற்க சிறை நிர்வாகம் மறுத்து வருகின்றது. பூஸ சிறைச்சாலையில் கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட பல பெரும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment