ஹக்கீமும், திகாம்பரமும் ஆளுங்கட்சிக்கு தாவிவிடுவர் - நவீன் திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

ஹக்கீமும், திகாம்பரமும் ஆளுங்கட்சிக்கு தாவிவிடுவர் - நவீன் திஸாநாயக்க

“பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் திகாம்பரமும், ஹக்கீமும் ஆளுங்கட்சியின் பக்கம் தாவிவிடுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கினிகத்தேனயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் வாக்குகேட்பவர்கள், தேர்தலின் பின்னர் ஆளுங்கட்சி பக்கம் தாவிவிடுவார்கள். ரவூப் ஹக்கீம் தனது சகாக்களுடன் சென்றுவிடுவார். ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும்போது திகாம்பரம் சும்மா இருப்பாரா? அவரும் ஆளுங்கட்சி பக்கம் சென்றுவிடுவார்.

இன்று எம்மவர்கள் சிலர் திகாம்பரம் பின்னால் திரிகின்றனர். சிங்கள வாக்குகளை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இங்கு எமக்கும் உரிமை இருக்கின்றது.

2001 இல் மேல்கொத்மலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என தொண்டமான் கூறினார். நான் தலைகுனியவில்லை. செய்தேன். திகாம்பரத்துக்கும் அடிபணிந்தது கிடையாது” - என்றும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment