இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா

மும்பையை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அந்த விஞ்ஞானி கடந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் கொரோனா தடுப்பு பணியில் இருப்பவர்கள் மட்டுமே தேவை என்றால் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், அந்த விஞ்ஞானியுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment