A-9 வீதியில் விபத்து - பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

A-9 வீதியில் விபத்து - பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

வவுனியா, கனகராயன்குளம் ஏ-9 வீதியில் இன்று (03) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் பணியாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது இன்று காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழை சேர்ந்த நிசான் ஜனுஸ்டன் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா நிருபர்)

No comments:

Post a Comment