பேருவளை பகுதியில் செயலமர்வு, விசாரணை நடத்துமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

பேருவளை பகுதியில் செயலமர்வு, விசாரணை நடத்துமாறு கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் 50 பேருக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட செயலமர்வு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் எம்.பியும் தேசிய சுதந்திர முன்னணி அமைப்பாளருமான ஜயந்த சமரவீர கூறினார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஹூல் நீதிமன்றம் செல்கிறார். மறுபக்கம் தனது மகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகிறார். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் 50 பேருக்கு திடீரென பேருவளை பகுதியில் செயலமர்வொன்று நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகமுள்ளது. இது தொடர்பாக அரசியலமைப்புச் சபை முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இதில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எவை. இதற்கு பணம் செலவிட்டது யார். இது தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு அறிவிக்கப்பட்டதா? என்பன தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment