நாட்டுக்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட ஆரம்பம் - பலம் சேர்த்தவர்களை ஒருநாளும் மறக்கவோ ஒதுக்கவோ முடியாது - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

நாட்டுக்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட ஆரம்பம் - பலம் சேர்த்தவர்களை ஒருநாளும் மறக்கவோ ஒதுக்கவோ முடியாது

நாடு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எழுச்சி பெறுகின்றன. மீண்டும் அவை அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 72 வருடங்கள் பழைமையான ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர்கள் 99 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 04 பேர் மட்டுமே கட்சியில் எஞ்சியுள்ளனர். இரண்டு துண்டாக கட்சி உடைந்துள்ளது.

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில் சிலர் விமர்சித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு இவர்கள் அதிகளவில் பங்காற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும் திருப்பி அழைக்கும் பொறுப்பு அரசுக்குரியது. அந்த பொறுப்பை மீறமாட்டோம். ஆனால் ஒருநாளைக்கு 285 பேரை மாத்திரமே அழைத்துவர முடியும். 

நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதகமில்லாதவாறு அவர்களை அழைத்து வர வேண்டும். ஒரு மில்லியன் பேர் வரை திரும்பி வர எதிர்பார்த்துள்ளனர். 07 முதல் 09 மில்லியன் டொலர் பெற்றுத் தந்து பொருளாதாரத்திற்கு பலம் சேர்த்தவர்களை ஒருநாளும் மறக்கவோ ஒதுக்கவோ முடியாது.

உரிய முறைமைக்கமைய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படுவர். அவர்களை அழைத்து வரும் செயற்பாட்டை துரிதமாக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகின்றனர்.

நாடு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எதிரான சக்திகள் எழுச்சி பெறும். அரச சார்பற்ற அமைப்புகள் அணி திரண்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலின் போதும் அவை செயற்பட்டன.

ஊடகங்கள், அரச நிறுவனங்கள் என்பவற்றின் இணையத்தளங்களை முடக்கி வருகின்றனர். எமது நாட்டுக்கு நிதி வழங்க வேண்டாமென அரச சார்பற்ற நிறுவனங்கள் உலக வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளன என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment