முன்னணி சோசலிச கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்ததைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளோயிட், அமெரிக்காவில் இனவாதத்தினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, முன்னிலை சோசலிச கட்சியினால் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று (09) பிற்பகல் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று திட்டமிடப்பட்டிருந்தது.
அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்டோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment