(இரா.செல்வராஜா)
குருணாகல் மாவத்தகம பகுதியில் புதிதாக பரவிய வெட்டுக் கிளிகளின் தாக்கம் ஊவா, தென் மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, தென் மாகாணங்களில் வெட்டுக் கிளிகள் பரவியுள்ளமை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக அந்த மாகாண விவசாய சபை அதிகாரிகள் விவசாய திணைக்களத்தின் அவதானத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதைத்தவிர மாவனெல்லை வரக்காபொல ஆகிய பகுதிகளில் இந்த வெட்டுக் கிளிகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மாவத்தகம பகுதியில் பரவியுள்ள வெட்டுக் கிளிகளின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டப்லியூ.ஏ.டப்லியூ. தென்னகோன் தெரிவித்தார்.
வெட்டுக் கிளிகளின் தாக்கத்தினால், வாழை, தென்னை, மா, கோப்பி, மரவள்ளி ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment