(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து செயற்படபோவதாக எதிர்த்தரப்பில் பலரும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு தனித்து ஆட்சி அமைப்பதற்கே தயாராகி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை. நாங்கள் ஒரு போதும் அவ்வாறான தீர்மானம் எடுத்ததில்லை.
கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற வகையில் அவர்களது செயற்பாடு திருப்திகரமாக இருக்கும் போது ஆதரிப்பதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக விமர்சனங்களையும் தெரிவிப்போம்.
இந்நிலையில் அரசாங்கத்தின் நன்மை தரும் ஒரு செயற்பாட்டுக்கு நாம் ஆதரவளித்தால், அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதாக அர்த்தமில்லை என்றும் கூறினார்.

No comments:
Post a Comment