வெட்டுக் கிளிகளின் சவாலை எதிர்கொள்ள துரித நடவடிக்கை அவசியம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

வெட்டுக் கிளிகளின் சவாலை எதிர்கொள்ள துரித நடவடிக்கை அவசியம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

தற்போது புதிய சவாலாக மாறியிருக்கும் வெட்டுக் கிளிகளின் தாக்கம் தொடருமாக இருந்தால் ஏற்கனவே சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் விவசாயிகளின் வருமானமார்க்கம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான விரைவான நடவடிக்கை அவசியமாகும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தற்போது வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு விவசாயத்துறைக்கு மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இச்சவாலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது பயிர்கள் வெட்டுக் கிளிகளின் தாக்கத்திற்கு உள்ளாவது அண்மைக் காலத்தில் விவசாயத்துறை எதிர்கொண்டிருக்கும் புதிய சவாலாக மாறியிருப்பதுடன், இது விவசாயிகளின் வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலை தொடருமான இருந்தால் ஏற்கனவே சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் விவசாயிகளின் வருமானமார்க்கம் மேலும் பாதிக்கப்படும். எனவே அத்தகைய சூழ்நிலையொன்று உருவாகாமல் தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

No comments:

Post a Comment