கொழும்பு - ஹட்டன் இடையில் புதிய புகையிரதம் - பரீட்சார்த்த சேவை இன்று இடம்பெற்றது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

கொழும்பு - ஹட்டன் இடையில் புதிய புகையிரதம் - பரீட்சார்த்த சேவை இன்று இடம்பெற்றது

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S-14 ரக புகையிரதத்தின் பரீட்சார்த்த சேவை இன்று (02) இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து ஹட்டன் வரையில் குறித்த S-14 ரக புகையிரதம் பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதாக, ஹட்டன் புகையிரத சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையான புகையிரத சேவையில் S-12 ரக புகையிரதமே சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த புதிய புகையிரதம் இனிமேல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)

No comments:

Post a Comment