கல்முனையில் பாரிய தீ - பல்பொருள் அங்காடி எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

கல்முனையில் பாரிய தீ - பல்பொருள் அங்காடி எரிந்து நாசம்

கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இத் தீ விபத்து இன்று (7) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸார் மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன் சுமார் 1 மணி நேரத்தின் பின் தீவிர முயற்சி காரணமாக தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது நாசகார செயற்பாட்டுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment