(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு பேரவையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் புதிய அரசாங்கத்தில் மீள்பரிசீலனை செய்யப்படும். தேசிய தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மை பல சம்பவங்கள் ஊடாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். மக்களின் ஜனநாயக உரிமையினை சவாலுக்குட்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு துரோகமிழைத்துள்ளது. பொதுத் தேர்தலை நடத்த உலக சுகாதார ஸ்தாபனதத்தில் அறிவுறுத்தல்களை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடு அல்ல எனவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை நடத்தும் திகதியை குறித்தொதுக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்து இழுத்தடிப்பினையே முன்னெடுக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம் பெறவிருந்த பொத் தேர்தலை கொரோனா வைரஸ் பரவல் காரமாண பிற்போட்டதில் இருந்து தற்போது வரை தேர்தல் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணாகவே செயற்படுகிறது.
பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாட்டை தோற்றுவிப்பதுடன் சந்தேகத்துக்கிடமாகவும் காணப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்த்தரப்பினரது எதிர்பார்ப்புக்கள் மாத்திரம் நிறைவேறியுள்ளது. தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என எதிர்பார்க்கும் எதிர்த்தரப்பினருக்கு சாதகமாகவே தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயற்படுகிறது.
தேர்தலை நடத்த உலக சுகாதார ஸ்தாபனத்தில் அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுவது ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாத்திரமே செயற்படுத்த முடியும்.
பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளதுடன், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வகுத்துள்ளார். ஆகவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலை பெற வேண்டும் என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடாகும்.
அரசியலமைப்பு பேரவையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சில ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். புதிய அரசாங்கத்தில் இந்த ஆணைக்குழுக்கல் மீள் பரிசீலனைக்கு உட்டுத்தப்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டு மக்களுக்கு துரோகமிழைக்கிறது. சுயாதீமான ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ண ஜூவன் ஹூல் ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக செயற்படுகிறார். இவரை ஆணைக்குழுவில் இருந்து வெளியேற்ற முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்துக்கும் அரசியலமைப்பு பேரவை தடையாக உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் தெரிவின் போது அரசியலமைப்பு பேரவைக்கு ரட்ண ஜூவன் ஹூலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் பரிந்துரை செய்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்படுவது தேசிய நல்லிணக்கத்தையும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பாதுகாக்கும் என்றே எதிர்பார்த்தோம். ஆனால் ரட்ண ஜூவன் ஹூல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பயன்படுத்தி சிங்கள மக்களுக்கும், நாட்டுக்கு எதிராகவும் செயற்படுகிறார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் நம்பிக்கை தொடர்பில் சான்று பகர்வது ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் செயற்பாடு அல்ல. மக்களுக்கு உரிய காலத்தில் தேர்தல் உரிமையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியின் நோக்கங்களுக்கு ஆதரவாக செயற்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சவாலுக்குட்படுத்தும் என்றார்.

No comments:
Post a Comment