மலையக மக்கள் முன்னணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார் அனுஷா சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

மலையக மக்கள் முன்னணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார் அனுஷா சந்திரசேகரன்

(இரா. செல்வராஜா)

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுஷா சந்திர சேகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் தலைவர் செ. சந்திர சேகரனின் புதல்வியான இவர் கட்சியின் பிரதி செயலாளராக செயற்பட்டு வந்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர் சுயசேட்சையாக போட்டியிடுகிறார். இவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர்  வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment